கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி?!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் அடுத்த வாரம் வியாழனன்று வெளியாக உள்ளது. இந்த படத்துடன் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படமும் வெளியாக உள்ளது.
பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அடுத்து யார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்ற கேள்வி இருந்தது.
அதற்கு பதிலாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியிடம் ஓர் கதை சொல்லியுள்ளதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்து விட்டதாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தை முடித்த பிறகு இந்த படத்தினை தொடங்கலாம் என கூறியுள்ளதாகவும், அதற்குள் அந்த கதையை டெவலப் செய்யுமாறு ரஜினி கூறியுள்ளதாகவும் தகவல்கள் கோலிவுட்டில் பரவி வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்கதான் வேணும்!
DINASUVADU