meena and rajinikanth [File Image]
சென்னை : நடிகை மீனாவுடன் முதல் படத்தில் நடிக்கவே ரஜினிகாந்த் அந்த சமயம் தயங்கியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தும் நடிகை மீனாவும் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. யஜமான், வீரா மற்றும் முத்து ஆகிய படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இவர்களுடைய ஜோடி பொருத்தமும் சரியாக இருக்கிறது என்று அந்த சமயம் ரசிகர்கள் கூறினார்கள். இருப்பினும் முதலில் நடிகை மீனாவுடன் இணைந்து நடிக்கவே ரஜினிகாந்த் யோசித்தாராம்.
ஏனென்றால், ரஜினிகாந்த் மீனாவை சிறிய வயதில் இருந்தே பார்த்து இருக்கிறாராம். சிறிய வயதில் இருந்தே மீனா ரஜினியை ( மாமா ) Uncle என்று தான் கூப்பிடுவாராம். எனவே, முதன் முதலாக யஜமான் படத்தின் கதையை ரஜினிகாந்திடம் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூறிவிட்டு படத்தில் உங்களுக்கு ஜோடியாக மீனா நடித்தால் சரியாக இருக்கும் என்று கூறினாராம்.
மீனாவின் பெயரை கேட்டவுடனே ரஜினிகாந்த் மிகவும் அதிர்ச்சி ஆகி அதெல்லாம் சரியாக வராது ஆர். வி. உதயகுமார் அந்த பொண்ணு என்னை சின்ன வயதில் இருந்து மாமா மாமா என்று அழைத்து இருக்கிறது. இந்த நேரத்தில் அந்த பெண்ணுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தால் அது சரியாக இருக்காது என்று கூறிவிட்டாராம்.
நான் அந்த பொண்ணுக்கு ஜோடியாக நடித்தால் மக்கள் அதனை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினாராம். பிறகு ஆர். வி. உதயகுமார் சார் கண்டிப்பாக இந்த படத்தில் மீனா நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் கண்டிப்பாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். நான் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வைப்பேன் அந்த மாதிரி தான் படத்தின் கதை இருக்கிறது என்று கூறினாராம்.
இயக்குனர் அவ்வளவு சொல்லி தான் மீனாவுடன் ரஜினி நடிக்கவே ஒப்புக்கொண்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் மீனா இருவரும் யஜமான் படத்தில் நடித்ததால் படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக வீரா மற்றும் முத்து ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…