அண்ணாத்த செய்த வேலை.! 30 கோடியை இழந்த ரஜினிகாந்த்?!

அண்ணாத்த திரைப்படத்தின் ரிசல்ட் காரணமாக ரஜினியின் சம்பளத்தில் 30 கோடி வரை குறைந்துள்ளதாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. டி.இமான் இசையமைக்க, செண்டிமெண்ட், ஆக்சன் படமாக இப்படம் வெளியானது.
இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்கள் மட்டுமே வெளியானது. இருந்தும் ரஜினி படம், குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் படம் ஒரு வாரம் தாக்குப்பிடித்து வசூல் செய்தது. 200 கோடி வசூலை படம் தாண்டியது.
ஆனால், அடுத்தடுத்து விமர்சனம், புது படம் வருகை ஆதலால், பல தியேட்டர்களில் அண்ணாத்த வசூல் ஆகவில்லை. எதிர்பார்த்த வெற்றியை அண்ணாத்த பெறவில்லை.
ஆதலால், ரஜினி அடுத்த பட சம்பளம் வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது. அதுவும், ஒன்றல்ல இரண்டல்ல, மொத்தமாக 30 கோடி ரூபாய் குறைந்துள்ளதாம். ஏற்கனவே அவர் 100 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது. தற்போது அடுத்த படத்திற்கு 70 கோடி தான் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால், அண்ணாத்த திரைப்படம் ரஜினி கேரியரை சற்று சரித்துவிட்டது என்பதே உண்மை.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025