மக்கள் மன்றத்தினர்களுக்கு கட்டளைகளை அடுக்கிய சூப்பர் ஸ்டார்

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வர போவதாக பல வருடங்களாக சொல்லி கொண்டே இருந்தார். தற்போதுதான் அதன் வேலைகளை தொடங்கியுள்ளார்.
ரசிகர்களை திரட்டி, தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றிவிட்டார். தற்போது அதனை ஒழுங்கு படுத்தும் விதமாக சில கட்டளைகளை மன்ற நிர்வாகத்திடம் அறிவித்தார்.
அது என்ன வென்றால், 35 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இளைஞர் அணியில் சேர முடியம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நிர்வாக பதவி, சாதி மத இயக்கங்களில் உள்ளவர்கள் மன்றத்தில் சேர தேவை இல்லை. மன்ற கொடியை எப்போதும் வாகனத்தில் பறக்க விட கூடாது. மன்ற நிகழ்சிகளின் போது மட்டும் பயன்படுத்தினால் போதும்.
18 வயதிற்க்கு மேல் யார் வேண்டுமானாலும் மன்றத்தில் சேரலாம். தலைமையகத்தின் அனுமதியின்றி யாரும் பொதுமக்களிடம் வசூல் செய்யகூடாது, தனி ஒருவர் மீது விமர்சனங்கள் வைக்கக்கூடாது. தனிபட்ட கருத்துக்களை மன்றம் சார்பாக கூறக்கூடாது.
உள்ளிட்ட பல்வேறு கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளன.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்