மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி- கமல்..? வெளியான சூப்பர் தகவல்.!!

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாம்.
#MAAMANNAN – Grand Audio Launch on June 1st Week !#Rajinikanth???? and #KamalHaasan will be the chief guest #Vadivelu will perform Live at the event ! pic.twitter.com/G1SBUSLjkP
— Deep_breathe_Cinema (@CinemaDeep) May 14, 2023
இந்த விழாவில், கமல், ரஜினி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர். படத்தில் வடிவேலு, ரஹ்மான் இசையில் ஒரு பாடல் உள்ளதால், அந்த பாடலை, இருவரும் விழாவில் பாட உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025