சினிமா

லியோ வெற்றி விழாவில் ரஜினி – கமல்? கலந்து கொண்டால் தீபாவளி தான்!

Published by
பால முருகன்

லியோ படத்தின் வெற்றிவிழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

லியோ வெற்றி விழா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி இருக்கும் நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் வெற்றி விழா நாளை (நவம்பர் 1) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் நடிகர் விஜய்யும் வரவிருப்பதாக கூறப்படுகிறது.

எத்தனை பேருக்கு அனுமதி

லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை என்ற காரணத்தால் கண்டிப்பாக இந்த வெற்றி விழாவுக்கு வரவேண்டும் என பல ரசிகர்கள் விருப்பம் கொண்டு டிக்கெட்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த அரங்கத்தில் 3000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே 3,000 ரசிகர்கள் மட்டுமே தான் இந்த விழாவிற்கு வருகை தரமுடியும்.

ரஜினி கமல் பங்கேற்பு ?

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரும், ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் எடுப்பதன் காரணமாக ரஜினியும் லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு வருகை தரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமின்றி கமல்ஹாசனின் குரலில் லியோ படத்தின் இறுதிக்காட்சியில் வந்த காரணத்தால் கமல்ஹாசன் நிச்சியமாக கலந்துகொள்வார் எனவும் தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது.

லியோ வெற்றி விழாவில் இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை! ரசிகர்களுக்கு ஷாக்…

இருவரும் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை

ஏற்கனவே ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வாக்கு வாதம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், அவர் விழாவிற்கு வந்து விஜய் ரசிகர்கள் எதாவது பேசிவிட்டால் அது நன்றாக இருக்கிறது என்று எண்ணி அவரும் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லையாம். அதைப்போல கமல்ஹாசனும் இந்தியன் 2 பட வேளைகளில் பிசியாக இருப்பதன் காரணமாக அவராலும் லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ள முடியாது எனவும் லேட்டஸ்டாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கலந்திருந்தால் தீபாவளி தான்

லியோ வெற்றி விழாவில்  ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கலந்துகொண்டிருந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு தீபாவளியாக தான் இருந்திருக்கும். ஏனென்றால், தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்கள் என்றால் ரஜினி, கமல், விஜய் தான். எனவே இவர்கள் எல்லாம் ஒரே மேடையில் இருந்தால் அதனை பார்க்கும் ரசிகர்களுக்கு தீபாவளி தானே. எனவே, உண்மையில் யாரெல்லாம் லியோ வெற்றி விழாவில் கலந்துகொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

16 minutes ago

TNBudget 2025 : மெட்ரோ ரயில் விரிவாக்கம்… 1,125 புதிய மின்சார பேருந்துகள்.!

சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…

22 minutes ago

TNBudget 2025 : 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…

27 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!

சென்னை :  சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

55 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : சென்னையில் புதிய நீர்த்தேக்கம்… ரூ.360 கோடி ஒதுக்கீடு!

சென்னை : சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

1 hour ago

TNBudget 2025 : புதிய கல்லூரிகள், AI, சதுரங்கம்.., மாணவர்களுக்கான அறிவிப்புகள்!

சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…

2 hours ago