ரஜினி ஒன்னும் அப்படி இல்ல …பல விஷயங்களில் அவர் அப்படி….

Default Image

கமல்ஹாசன், காவிரி விஷயத்தில் மட்டும் ரஜினியைக் குற்றம் சொல்ல முடியாது’ என  தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். அதைச் செய்தே ஆகவேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினையாக இதை ஆக்கியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அதைவிட முக்கியமான விஷயம், தமிழர்களுக்கு இருக்கும் தலையாய கடமை தண்ணீரை சேமிப்பதோடு, வீணாக்காமலும் இருக்க வேண்டும்.

‘தலைமை எடுப்பதற்கு நீ யார்’ என்று கேட்பார்கள் இல்லையா? ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர், தலைவர்’ என்று நான் சொல்லிக் கொள்ளலாம். அது பத்தாது என்று சொன்னால், அதற்கு ஆவன செய்ய வேண்டும். ஆனால் பேசுவோம், பேசுவதில் ஒன்றும் தவறில்லை. இப்போதும் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என்றைக்காவது நியாயம் கிடைக்கும் என்று என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்காக பேசிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது, செயல்படவும் வேண்டும். எலெக்‌ஷனுக்கு தேவையான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டே இருந்தால் ஒற்றுமை வளராது. ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு.

மக்கள் குரலைக் கொண்டு சேர்ப்பதில் எந்தவிதமான அவமானமும் கிடையாது, பெருமைதான். ‘நீ யார்?’ எனக் கேட்டால் என்னுடைய பெயர், விலாசத்தைச் சொல்லிவிட்டு, ‘கடமை இருக்கிறது, நான் தமிழன்’ என்று சொல்வேன். அது போதுமானது. முதலமைச்சராகவோ, மந்திரியாகவோ இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். ஆனால், அப்போது நான் கட்சி தொடங்கவில்லை” என்றார்.

‘நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் உட்பட எதிலும் கருத்து சொல்லாமல் இருக்கிறாரே…’ என்ற கேள்விக்கு, “பல விஷயங்களில் அவர் அப்படி இருக்கிறார். அதனால், ஒரு விஷயத்தில் மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியாது” என்று பதில் அளித்தார் கமல்ஹாசன்.

மேலும் செய்திகளுக்கு  தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்