Categories: சினிமா

இதெல்லாம் அப்பவே பாத்தாச்சு! கழுதைப்புலி சண்டை காட்சியை முன்பே செய்தார் ரஜினி!

Published by
கெளதம்

லியோ படத்தில் விஜய் vs ஹைனா (கழுதைப்புலி) ஆக்சன் காட்சிகள் பயங்கரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆக்சன் காட்சிகளை சூப்பர் ஸ்டார் ரஜினி முன்பே செய்துவிட்டார் என்று ரஜினி ரசிகர்கள் ஒரு வீடியோ வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

இயக்குனர் லோகேஷின் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19- ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளி வரவிருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டது.

அதவாது, விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லியோ படத்தின் ட்ரைலர் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தது.

பொதுவாக ஒரு படத்தின் டிரைலர் வெளி வந்தாலோ அல்லது பாடல்கள் ரிலீஸ் ஆனாலும் நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள். அந்த வகையில், இந்த முறை ‘லியோ’ படத்தின் டிரைலர் போஸ்டரை வைத்து ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். அது என்னவேறன்றால், லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹைனா (கழுதைப்புலி) சண்டை காட்சி தான் கூஸ்பம்ஸ் ஆக இருக்கும்  என்று கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, இந்த ஹைனா (கழுதைப்புலி) உடன் சண்டை போடும் காட்சிகளை ரஜினி அப்பவே ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் செய்து விட்டார் என்று அந்த காட்சிகளின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

இதனையடுத்து, அந்த வீடியோவை கோச்சடையான் படத்தை இயக்கிய ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரீ ட்வீட் செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோவை இணையத்தளத்தில் ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

கோச்சடையான் திரைப்படம் அனிமேஷனில் உருவாக்கப்பட்டது. ரஜினி-ஹைனா சண்டை காட்சிகள் அனிமேஷன் செய்யப்பட்டிருந்தாலும் அந்த காட்சி பிரமதமாக இருக்கும். அதுபோல், லியோ திரைப்படத்தில் விஜய் – ஹைனா சண்டை காட்சிகளுக்கு படக்குழு மெனக்கெட்டு ஜிஜி வேலை செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

12 minutes ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

53 minutes ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

1 hour ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

10 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

12 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

13 hours ago