ரஜினி படம் தான் எனக்கு முக்கியம்…ராயன் படத்துக்கு நோ சொன்ன பிரபல நடிகர்?

ராயன் : கடந்த ஜூலை 26-ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் எங்கே பார்த்தாலும் படம் பற்றி தான் பேசி வருகிறார்கள். அந்த அளவுக்கு படம் நன்றாக இருக்கும் காரணத்தால் மக்கள் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். வசூல் ரீதியாக மட்டும் படம் 4 நாட்களில் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடித்துள்ள எல்லா நடிகர்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சந்தீப் கிஷன் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆனால், அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க நடிகர் விஷ்ணு விஷாலிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்,
ஆனால், விஷ்ணு விஷால் படத்தின் கதை எல்லாம் முழுவதுமாக கேட்டுவிட்டு என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஏனென்றால், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தான் விஷ்ணு விஷால் ரஜினிகாந்துடன் இணைந்து லால் சலாம் படத்தில் நடித்து கொண்டு இருந்தாராம். எனவே, இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.
இதன் காரணமாக அவரால் ராயன் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம். இதனால் தான் அவரால் ராயன் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். மேலும் லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால் விஷ்ணு விஷால் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதே சமயம் ராயன் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே, இந்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கலாம் என நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.