ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!பட்டியல் வெளியீடு!
நடிகர் ரஜினி தற்போது தனது பட வேலைகளை முடித்துள்ள நிலையில், மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகிவிட்டார். இதற்காக வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதி 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
26-12-17 – காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி.
27-12-17 – நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
28-12-17 – மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம்.
29-12-17 – கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு.
30-12-17 – வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை
31-12-17 – வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை
மேலும் ரஜினியை சந்திக்க வரும் அவரது ரசிகர்களுக்கு சில விதிகளும் அளிக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, ரஜினிக்கு சால்வை, மாலைகள் ஏதும் அணிவிக்கக் கூடாது என்றும், காலில் விழக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது…
source: dinasuvadu.com