ரஜினியும்,அஜித்தும் சேர்ந்து நடிக்கும் கதை என்னிடம் உள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்
சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தல அஜித் கோலிவுட் வட்டாரத்தில் அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தல அஜித் கோலிவுட் வட்டாரத்தில் அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்கள். இவர்களின் படம் வரும் நாட்களை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி விடுவார்கள்.இதனையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு அஜித்தின் “மங்காத்தா” படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் அஜித்தின் கேரியரில் முக்கியமான படம் என்றே சொல்லலாம். இந்நிலையில் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்தையும் ,விஜயையும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் மாதிரியான கதையை தயார் செய்து வைத்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
தற்போது அளித்த பேட்டியில் இயக்குநர் ,வெங்கட்பிரபு, தல அஜித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது போன்ற ஒரு கதையை தயாரித்து வைத்துள்ளதாகவும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.