அனந்த் அம்பானி திருமண விழாவில் ரஜினி, அமிதாப்…ஷாருக்கான் செய்த நெகிழ்ச்சி செயல்!
ஆனந்த் அம்பானி திருமணம் : முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமண செய்தி தான் தற்போது உலகத்தில் பெரிய அளவில் பேசப்படும் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு பிரமாண்டமாக அவருடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் நேற்று (ஜூலை 12)மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது.
பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு உலகெங்கிலும் உள்ள பல தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக ஷாருக்கான், ரஜினிகாந்த், நயன்தாரா, அட்லீ, அமிதாப்பச்சன், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான் செய்த நெகிழ்ச்சி செயல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விழாவிற்கு வந்தவுடன் ஷாருக்கான் அனைவரையும் பார்த்து தேடி தேடி சென்று வணக்கம் வணக்கம் என கூறி நலம் விசாரித்தார். ரஜினி அந்த பக்கம் திரும்பி அமர்ந்து இருந்த நிலையில், வேகமாக அவரிடம் சென்ற ஷாருக்கான் கையை பிடித்து நலம் விசாரித்தார்.
பிறகு அமிதாப் பச்சன் அங்கு வந்த நிலையில், வேகமாக அவரை பார்த்த ஷாருக்கான் காலில் விழுந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த பலரும் ஷாருக்கானை பாராட்டி வருகிறார்கள். மிக்பெரியவர் மிகவும் எளிமையானவர் என அவரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
Here’s the video of legends in one frame#ShahRukhKhan #Rajinikanth #AmitabhBachchan #Sachin #AnantRadhikaWedding pic.twitter.com/UCM8teGLUE
— Spotlights On Celebs (@Saimbutt_19) July 13, 2024