ராஜன் இல்லாமலே தயாராகும் ராஜன் வகையறா.?! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்.!
வடசென்னை படத்தில் பயன்படுத்தாமல் மீதம் உள்ள அமீர் நடித்த ராஜன் காட்சிகளை வெப் சீரிஸில் பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்து இல்லை இல்லை அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் முடியும் போதே இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்போடு நிறைவு பெற்றிருக்கும்.
இந்த படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் தான் வடசென்னையில் முக்கிய கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஜீ5 OTT தளத்திற்காக ஒரு வெப் சீரிஸை வெற்றி மாறன் இயக்கஉள்ளாராம்.
இந்த வெப் சீரிஸ், ராஜன் கதாபாத்திரத்தின் இளமை காலத்தை மையப்படுத்தி எவ்வாறு ஒரு சிறுவன் ராஜன் போல அந்த ஊருக்கே பெரிய ஆளாக மாறுகிறான் என்பதை மையப்படுத்தி எடுக்கப்படுகிறதாம். இதில் சிறு வயது ராஜனாக அசுரனின் தனுஷின் இளைய மகனாக நடித்த கென் கருணாஸ் நடிக்க உள்ளாராம்.
வடசென்னை படம் ஷூட்டிங்கில் ராஜன் கதாபாத்திர காட்சிகள் மட்டுமே ஒரு படம் ரிலீஸ் செய்யும் அளவிற்கு இருக்கிறதாம். அதனை இந்த சீரிஸுக்கு வெற்றிமாறன் பயன்படுத்த திட்டமிட்டுள்ளாராம். ஆதலால், சிறுவயது ராஜன் காதாபாத்திரத்திற்கு கென் கருணாசை வைத்து இயக்கிவிட்டு, பெரிய வயது ராஜன் கதாபாத்திர காட்சிகளுக்கு வடசென்னையில் மீதமுள்ள காட்சிகளை பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். விரைவில் இந்த வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.