“மகேஷ் பாபுவை பிடித்துவிட்டேன்” புதுப்படம் குறித்த ஹிண்ட் கொடுத்த ராஜமௌலி.!
இயக்குநர் ராஜமௌலி அடுத்ததாக இயக்கவுள்ள மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மும்பை : இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படமான ‘எஸ்.எஸ்.எம்.பி29’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில், மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புக்காக படப்பிடிப்பிற்காக பிரியங்கா சோப்ரா தற்பொழுது ஐதராபாத்தில் இருக்கிறார்.
அவர் சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்டார். மேலும், இந்த வார தொடக்கத்தில், அவர் இந்த புதிய படத்தை தொடங்குவதற்கு முன், சில்குர் பாலாஜி கோயிலுக்குச் சென்று ஆசி பெற்றார். இந்த நிலையில், ராஜமௌலி தனது புதிய படத்தை, ஒரு காமெடியான இன்ஸ்டா போஸ்ட் மூலம் உறுதி செய்துள்ளார்.
இந்த பாடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவரது சமீபத்திய பதிவு சஸ்பென்ஸை அதிகமாக்கியுள்ளது. ராஜமௌலி தனது பதிவில், சிங்கம் (மகேஷ்பாபு) சிறையில் அடைக்கப்பட்டிருக்க, அவரது பாஸ்போர்ட்டை ராஜமெளலி வைத்திருக்கிறார்.
அதன்படி, படம் குறித்த ஹிண்ட் கொடுத்த ராஜமௌலி, மகேஷ் பாபு ‘Mufasa-The Lion King’ படத்தில் ‘Mufasa’-விற்கு டப்பிங் பேசியதால் அதனை சுட்டிக்காட்டி மறைமுகமாக பதிவிட்டுள்ளார். இதற்கு, தனது போக்கிரி பட டயலாக்கான, ‘ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்’ என மகேஷ் கமெண்ட் செய்துள்ளார். மேலும், அதற்கு “Finally” என பிரியங்கா சோப்ரா கமெண்ட் செய்துள்ள நிலையில், அவரும் இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025