கதாநாயகியாக களமிறங்கிய ராஜலட்சுமி.! வெளியானது புது பட போஸ்டர்..!

Published by
பால முருகன்

செந்தில் – ராஜலட்சுமி ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பரான பாடல்களை படித்ததன் மூலம் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து சினிமாவில் பாடிய முதல் பாடலான “சின்ன மச்சான்” பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.

Senthil Rajalakshmi
Senthil Rajalakshmi [Image Source: Google ]

தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் ராஜலட்சுமி கடைசியாக புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது என்று கூறலாம். இந்த பாடலை தொடர்ந்து சில பெரிய படங்களிலும் பாடல்களை பாடி வருகிறார்.

இந்நிலையில், பாடகியாக கலக்கி வரும் ராஜலட்சுமி தற்போது கதாநாயகியாகவும் கலக்க வருகிறார். ஆம்,  ராஜலட்சுமி தற்போது “லைசென்ஸ்” எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Raja Lakshmi

பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையம்சம் கொண்ட  இந்த “லைசென்ஸ்” திரைப்படத்தை கணபதி பாலமுருகன் இயக்குகிறார்.  படத்தில் ராதாரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாடகியாக நம் அனைவரையும் கவர்ந்த ராஜலட்சுமி நடிகையாக கவருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Recent Posts

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

டெல்லி :  விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…

7 hours ago

பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…

8 hours ago

“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!

நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…

8 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 பேருக்கு அனுமதியில்லை, டிவி. பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டுமாம்..!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…

9 hours ago

சூர்யாவின் “ரெட்ரோ” பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!

சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…

10 hours ago

ஆபாச பேச்சு: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரில் தொழிலதிபர் கைது!

கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…

10 hours ago