கதாநாயகியாக களமிறங்கிய ராஜலட்சுமி.! வெளியானது புது பட போஸ்டர்..!
செந்தில் – ராஜலட்சுமி ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பரான பாடல்களை படித்ததன் மூலம் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து சினிமாவில் பாடிய முதல் பாடலான “சின்ன மச்சான்” பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.
தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் ராஜலட்சுமி கடைசியாக புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது என்று கூறலாம். இந்த பாடலை தொடர்ந்து சில பெரிய படங்களிலும் பாடல்களை பாடி வருகிறார்.
இந்நிலையில், பாடகியாக கலக்கி வரும் ராஜலட்சுமி தற்போது கதாநாயகியாகவும் கலக்க வருகிறார். ஆம், ராஜலட்சுமி தற்போது “லைசென்ஸ்” எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையம்சம் கொண்ட இந்த “லைசென்ஸ்” திரைப்படத்தை கணபதி பாலமுருகன் இயக்குகிறார். படத்தில் ராதாரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாடகியாக நம் அனைவரையும் கவர்ந்த ராஜலட்சுமி நடிகையாக கவருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#License FL
SuperSinger #Rajalakshmi as a Lead#SuperSingerSeason9 | #Vijaytv | #ராஜலட்சுமி #TamilCinema pic.twitter.com/53h04buNa4
— CineBloopers (@CineBloopers) December 13, 2022