இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை YSR நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ட்ரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி, யுவன், சீனு ராம சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
அப்போது அதில் பேசிய விஜய் சேதுபதி தான் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ” எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமா என்று தெரியவில்லை .. ராஜா சாரும் யுவன் சங்கர் ராஜா சாரும் சேர்ந்து ஒரு படத்தில் இசையமைக்க..எங்கள் இயக்குனர் சீனுராமசாமி சார் இயக்கத்தில் இப்படி ஒரு வாய்ப்பு யாருக்காவது அமையுமா என்று தெரியவில்லை. எனக்கு அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி.
நான் ராஜா சாரோட வெறித்தனமான தீவிரமான ஒரு ரசிகன். அவருடைய இசை புரியும்போது அறிவில் வளர்ச்சி அடைவது போல தோன்றுகிறது. அவ்வளவு அழகா இருக்கிறது அவ்வளவு விவரமாக இருக்கிறது. எனது மனதை சார்ந்து இருக்கிறது. நான் பெருமையாக சொல்வேன் ராஜா சார் எங்களுடைய சொத்து என்று. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த யுவனுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…
உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர்…