விபத்தில் சிக்கிய ராஜா ராணி சீரியல் ஹீரோ !!!!
விஜய் டிவியில் பிரபலமான தொலைக்காட்சித்தொடர் ராஜா ராணி ஆகும். இதில் சஞ்சீவ் மற்றும் அல்யா மானசா ஆகியோர் முதன்மைப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான ‘கீ அபோன் போர்’ எனும் தொடரின் தமிழ் பதிப்பாகும்.
மேலும் இந்த தொடர் 4வது விஜய் தொலைக்காட்சி விருதுகள் மற்றும் கலாட்டா நட்சத்திரா விருதுகளில் சிறந்த தொடர், சிறந்த நாயகன் மற்றும் நாயகி, சிறந்தவில்லி, சிறந்த தாய், சிறந்த ஜோடி போன்ற 19 க்கும் மேலுள்ள பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சீவ் மற்றும் அல்யா மானசா ஆகியோர் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து வருகிறார்கள்.மேலும் இவர்கள் புத்தாண்டிற்கு வெளியூர் சென்றுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தது.அதன் பிறகு சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த பதிவையும் வெளியிடாமல் இருந்தார்.
தற்போது அவரது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் எனக்கு விபத்து நேர்ந்துள்ளது.மேலும் பயப்படும் அளவுக்கு பெரிய காயம் இல்லை.மேலும் ‘உங்களது பிராத்தனையால் சீக்கிரம் குணமாகி விடுவேன் ‘என்று தற்போது பதிவிட்டுள்ளார்.