திருமணத்திற்கு முன்பு சின்ன பார்ட்டி? காதலருடன் ஜாலி பண்ணும் ரகுல் ப்ரீத் சிங்!
தீரன் அதிகாரம் ஒன்று, NGK , அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகரான ஜாக்கி பக்னானியை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்.
ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவரும் காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவருக்கும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி, கோவாவில் திருமணம் செய்து கொள்ளஉள்ளதாக தகவல்கள் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இந்த மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ஆகி இருக்கும் நிலையில், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கிபக்னானி இருவரும் தங்களுக்கு நெருக்கமான நண்பர்களை அழைத்து ஒரு சிறிய பார்ட்டி கொடுத்துள்ளார்கள். இதனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போகும் செய்தி உண்மைதானா என்ற கேள்வியும் எழும்பி இருக்கிறது.
லால் சலாம் கிளைமாக்ஸ் பயங்கரமா இருக்கும்! எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபலம்!
தாய்லாந்தில் தனக்கு நெருக்கமான நண்பர்களை அழைத்து சென்று ஜாலியாக கடலுக்குள் விளையாடி ரகுல்ப்ரீத்சிங் மற்றும் ஜாக்கிபக்னானி நடனம் ஆடி கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் திருமணம் குறித்த தகவலை இருவரும் அறிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.