பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!

rakul preet singh marriage

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் மணமகளாகியுள்ளார். நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை அவர் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தார். இதனையடுத்து இன்று பெற்றோர்கள் முன்னிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் இன்று (பிப்ரவரி 21) மதியம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. அவர்களின் திருமணம் ஆனந்த் கராஜ் என்ற பாரம்பரிய பஞ்சாபி பாணியில் நடைபெற்றது. மணமகன் பாரம்பரியத்தின் படி, அவர்கள் மீண்டும் சிந்தி பாணியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இவர்களுடைய திருமண கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக கடந்த பிப்ரவரி 19 -ஆம் தேதியே தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். அவர்களின் ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத விழாக்கள் பிரமாண்டமான முறையில் கோவாவில் நடைபெற்றது. ஹீரோ வருண் தவான், ஹீரோயின் ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா ஜோடி பாடல்களுக்கு நடனமும் ஆடி இருந்தார்கள். அதற்கான வீடியோவும் வைரலானது.

அடேங்கப்பா! ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதனையடுத்து இன்று ஜாக்கி பக்னானிக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கான புகைப்படங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  இவர்களுடைய திருமணத்திற்கு அனன்யா பாண்டே, ஆதித்யா ராய் கபூர், சாராஅலிகான், டைகர்ஷ்ராஃப், வருண்தவான், உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.

ரகுல் ப்ரீத் சிங் தான் காதலிப்பதை கடந்த 2021 -ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவித்தார். அதன்பிறகு காதலனுடன் சுற்றுலா சென்றுகொண்டு வந்த இவர் சினிமா கேரியர் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு தன் காதலனை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் செட்டில் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்