வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங் திருமண பத்திரிக்கை! குவியும் வாழ்த்துக்கள்!!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகர் ஜாக்கி பக்னானி இருவரும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வருகிறார்கள். இருவரும் டேட்டிங் செய்து வந்த தகவல் வெளியே தெரிந்த பிறகு காதலிப்பதாக இருவருமே அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். அதன்பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கும் தகவலை பற்றிய செய்தி தான் அடிக்கடி வெளியாகி கொண்டு இருக்கிறது.
அந்த வகையில், ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாகவும், அதன்படி இவர்கள் இருவருக்கும் வரும் வருகின்ற பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இன்னும் இருவரும் திருமணம் பற்றி அறிவிக்காமல் இருக்கிறார்கள்.
சிம்புவுடன் இணையவிருந்த வெற்றிமாறன்? சுரேஷ் காமாட்சி சொன்ன கதை!
இருப்பினும் நம்மபதக்க சினிமா வட்டாரத்தில் ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துகொள்வது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகர் ஜாக்கி பக்னானி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ள தகவலை உறுதி செய்யும் வகையில், அவர்களுடைய திருமண அழைப்பிதழ் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது.
இந்த ஜோடி கோவாவில் தங்கள் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இவர்களுடைய திருமணத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், உறவினர்கள் என பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்களாம். இவர்களுடைய திருமண பத்திரிகை வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கி விட்டார்கள்.
View this post on Instagram