பட வாய்ப்பு குறைந்ததால் மூத்த கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த ராகுல் ப்ரீத் சிங்
ரகுல் பிரீத்சிங்குக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் தான் நாகார்ஜுனுடன் ஜோடியாக நடிக்கிறார். என தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது.
ராகுல் ப்ரீத் சிங் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர்சமீபத்தில் வெளியான “தேவ் ” திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இதனை தொடர்ந்து இவர் தமிழில் சூர்யாவுடன் “என் .ஜி .கே “திரைப்படத்திலும் , சிவகார்த்திகேயன் உடன் “SK 14” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் “மன்மதடு-2” என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுன் ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார். இவர் இதுவரை மூத்த
கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து இல்லை.
ரகுல் பிரீத்சிங்குக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் தான் நாகார்ஜுனுடன் ஜோடியாக நடிக்கிறார். என தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது.நாகர்ஜுனின் மகன் நாக சைதன்யா ஜோடியாக ரகுல் பிரீத்சிங் ஏற்கனவே நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.