எம்மாடியோ! ராகவா லாரன்ஸ் படத்திற்கு இத்தனை கோடி பெட்ஜெட்டா?
Raghava Lawrence தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புது படம் ஒன்று 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகிறது. கடைசியாக ராகவா லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி இருந்தது.
READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?
இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அடுத்ததாக தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படத்தைஅயோக்கியா படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கவுள்ளாராம்.
READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!
இந்த திரைப்படத்தினை கோல்ட்மைன் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கூடுதலான தகவல் என்னவென்றால் இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாம். இதுவரை ராகவா லாரன்ஸ் படங்கள் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது இல்லை.
read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?
முதன் முதலாக அவருடைய சினிமா கேரியரில் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ளதாம். இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இதனை போலே ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் 4-வது பாகத்தை எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.