மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுத்து சர்ப்ரைஸ் செய்த ராகவா லாரன்ஸ்!

Raghava Lawrence

Raghava Lawrence: தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கி வரும் மாற்றுத்திறனாளி குழுவினருக்கு இருசக்கர வாகனம் பரிசளித்தார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.

மாற்றுத்திறனாளிகளுக்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் பைக்குகளைப் பரிசாக வழங்கியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமாவில் பிசியாக இருந்தாலும், ஏழை எளியோருக்கு உதவி செய்து வருவது புதியதல்ல அதுவும் மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.

அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தனது மாற்றுத்திறனாளிக் குழுவினர் ‘மல்லர் கம்பம்’ என்ற கலையைச் செய்து காட்டினர். அப்பொழுது, அவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவதாகவும், அவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகவும் அவர்களை வைத்து படம் எடுக்க இருப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலாவதாக 3 சக்கரங்கள் கொண்ட 13 ஸ்கூட்டிகளை நேற்றுப் பரிசாக வழங்கியுள்ளார். மேலும், கூடிய விரைவில் அவர்களுக்கு வீடு கட்டித் தரவிருக்கிறார்.

ராகவா லாரன்ஸின் இந்த செயலுக்கு பல்வேரு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில், ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்