raghava lawrence and rajinikanth [File Image]
ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் ராகவலாரன்ஸ் படங்களில் நடித்து வருவதைப்போல சம்பாதிக்கும் பணங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதன் காரணமாக அவர் நடிக்கும் படங்களில் மக்களுக்கு உதவி செய்வதாலும், சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பதால் டைட்டில் கார்டில் ‘மக்கள் சூப்பர் ஸ்டார் ‘ என்ற பட்டத்தை வைத்து கொண்டார்.
ஒரு சில ரஜினி ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொண்டாலும் சில ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் பட்டத்தை மாற்றவேண்டும் என்பது போல கூறினார்களாம். ஒரு கட்டத்தில் ரஜினி ரசிகர்கள் லாரன்ஸை திட்டி வந்த காரணத்தால் சற்று கடுப்பாகி என்ன இது நமக்கு ரஜினி சாரை மிகவும் பிடிக்கும் என்பதால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக்கொண்டோம் இதற்கு என் திட்டுகிறார்கள்? என்று யோசித்தாராம்.
ஒரு மகன் தன்னுடைய அப்பாவின் பெயரை தன்னுடைய பெயருக்கு பின்னால் போடுவது போல் நினைத்து தான் அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டாராம். பிறகு ரஜினி ரசிகர்கள் மன வருத்தம் கொடுக்கும் வகையில் பேசிய காரணத்தால் தன்னுடைய படங்களில் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் போட வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
பிறகு இதனால் மன வருத்தத்தில் இருந்த ராகவலாரன்ஸ் இடம் அவருடைய அம்மா உன்னுடைய தலைவர் பெயரை தானே வைத்துள்ளாய் இதற்கு என் தப்பாக பேசுகிறார்கள்? என கேட்டாராம். அதற்கு இல்லை அம்மா என்னை பார்த்து தப்பா பேசிட்டாங்க எனக்கு அது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது.
எனவே, என்னை பார்த்து இப்படியெல்லாம் தப்ப பேசிட்டாங்க நான் இனிமேல் இந்த பட்டத்தை வைத்து கொள்ளமாட்டேன். எனக்கு இந்த பட்டம் வேண்டாம் அம்மா என்று தனது தாயாரிடம் மிகவும் வேதனையுடன் ராகவலாரன்ஸ் கூறிவிட்டாராம். அதற்கு அவருடைய அம்மா இல்லை நீ போடு பார்த்துக்கொள்ளலாம் என்பது போல கூறினாராம். ஆனால், எவ்வளவு சொல்லியும் அந்த மன வருத்தத்தில் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இந்த தகவலை ராகவலாரன்ஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…