காதலர்கள் சந்தோஷமா இருக்க ராதிகாவின் சூப்பரான அட்வைஸ்… அந்த நபரின் பேச்சை கேக்காதீங்க…
நடிகை ராதிகா ஆப்தே முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே பெனெடிக்ட் டய்லொர் என்ற பிரிட்டிஷ் காரரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து கொண்டே வருகிறார். அடிக்கடி ஏதேனும் சர்ச்சைகளிளும் சிக்கிவிடுவார்.
இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகா ஆப்தே அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது ” நான் மற்றும் என்னுடைய கணவர் இருவருமே மிகவும் சந்தோசமாக இருக்கிறோம். எனக்கு பிடித்ததை நான் செய்துகொண்டிருக்கிறேன்..அவருக்கு பிடித்ததை அவர் செய்து கொண்டிருக்கிறார். அவரவர் உலகத்தில் சுதந்திரமாக அற்புதமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், கணவன் – மனைவி அல்லது காதலன்-காதலி இவர்கள் இவர்களுக்கும் இடையே அடிக்கடி அதாவது சண்டைகள் ஏற்பட்டால் உங்களுக்குள்ளே முடித்துக்கொள்ளுங்கள் மூன்றாம் மனிதனின் ஆலோசனையை பெற தயவு செய்து விருப்பாதீர்கள். அது காதல் மற்றும் கணவன்- மனைவி வாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தானது. மூன்றாவது மனிதர் உங்களுடைய வாழ்க்கையில் எப்போது வருகிறார்களோ அப்போது நல்லாக போய்கொண்டிருக்கும் உறவில் விரிசல் விழுந்துவிடும்.
நம்மளுடைய கணவர் அல்லது, காதலரை நம்மைவிட யாரும் நன்றாக புரிந்து வைத்திருக்க முடியாது. எனவே நம் வாழ்க்கையில், நமது பிரச்சினையை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.இதில் மூன்றாவது மனிதர் வந்தால் நல்ல சென்றுகொண்டிருக்கும் வாழ்கை சோகத்தை நோக்கி செல்லும்” என கூறிஉள்ளார் ராதிகா ஆப்தே.