ஆரவ் படத்தில் முக்கிய வேடத்தில் ராதிகா
- ‘ராஜ பீமா’ படத்தை அடுத்து இயக்குநர் சரண் இயக்கத்தில் “மார்க்கெட்ராஜா ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராதிகா “மார்க்கெட் ராஜா” படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .
நடிகர் ஆரவ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் இவர் தற்போது ‘ராஜ பீமா’ படத்தை அடுத்து இயக்குநர் சரண் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்திற்கு “மார்க்கெட்ராஜா ” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
On sets of Dir.Charan’s movie “Market Raj’s MBBS” with Aarav and good friend Bette pic.twitter.com/JmHDRB6VZz
— Radikaa Sarathkumar (@realradikaa) March 20, 2019
இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகா “மார்க்கெட் ராஜா” படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .