சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு தினேஷ் கோபால்சாமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து சீரியல்களில் நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் மலர திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு, கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் தங்களுடைய பெற்றோர்கள் வீட்டில் தனி தனியே வசித்து வருகிறார்கள்.
காவலரை பிரிந்த ரச்சிதா மகாலட்சுமி சமீபத்தில் பிக் பாஸ் 6-வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் கூட அவர் தனது கணவரை பற்றி வாயை திறக்கவில்லை. ஆனால், தினேஷ் அவருக்கு ஆதரவாக தான் பேசி வந்தார். எனவே, ரசிகர்கள் பலரும் இருவரும் மீண்டும் இணைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் செய்வதாகவும், கொலை மிரட்டல் கொடுத்ததாகவும், நேற்று ரச்சிதா மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். நேற்று அவர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ” தினேஷை பிரிந்து நன் கடந்த சில மாதங்களாகவே தனியாக வசித்து வருகிறேன். என்னுடைய போனுக்கு கடந்த சில நாட்களாகவே ஆபாசமாக மெசேஜ் செய்வது…கொலை மிரட்டல் விடுகிறார்” என புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, ரச்சிதா கொடுத்த புகாரின் அடிப்படையில், மாங்காடு மகளிர் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரச்சிதாவிடமும், தினேஷிடமும் விசாரணை நடந்து வருகிறது. கணவர் மீதே ரச்சிதா புகார் அளித்துள்ளது தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…