Raayan [FILE IMAGE]
Raayan: நடிகர் தனுஷின் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 50வது படம் இந்த வருடம் திரைக்கு வர தயாராகி வருகிறது. அவரே இயக்கி நடிக்கும் ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தகவலின் படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி இந்திய அளவில் வெளியிடப்பட உள்ளதாக தெரிகிறது.
அதற்கு முன்னதாக படக்குழு தனுஷின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ‘ராயன்’ படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் தனுஷை தவிர, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார்கள். கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் பேனரில் ‘ராயன்’ படத்தைத் தயாரிக்கிறார்.
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…
லக்னோ : இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…