ராயன் வேற மாறி..தம்பி உன்னை நினைச்சா பெருமையா இருக்கு….தனுஷை புகழ்ந்த செல்வராகவன்!

dhanush and selvaraghavan

தனுஷ் : எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில், அவர் தன்னுடைய 50-வது படமான ராயன் படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பவர் பாண்டி என்ற திரைப்படத்தினை தனுஷ் இயக்கி இருந்தார். இயக்குனராக தனுஷிற்கு இது தான் இரண்டாவது படம். இந்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா  உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் மிகவும் அருமையாக இருக்கும் காரணத்தால் பலத்த விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு தனது தம்பி தனுஷை இயக்குனர் செல்வராகவன் பாராட்டியுள்ளார்.

படத்தினை பார்த்துவிட்டு அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் செல்வராகவன் “ராயன் படத்தினை பார்த்தேன். படம் மிகவும் அருமையாக இருந்தது நான் மெய்மறந்துவிட்டேன். தனுஷ் நடிகராகவும் இயக்குனராகவும் ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்கிறார். உன்னை நினைத்தால் எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது தம்பி. அனைத்து நடிகர்களின் நடிப்பையும் ரசித்தேன்!
ஏ.ஆர்.ரஹ்மான்  சார் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்! முழு குழுவிற்கும் மிகவும் மகிழ்ச்சி!” என பதிவிட்டுள்ளார்.

தனுஷ் சினிமாவில் அறிமுகம் ஆனது செல்வராகவன் இயக்கத்தில் தான். முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தினை தனுஷை வைத்து இயக்கி தான் செல்வராகவன் தனுஷை சினிமாவில் அறிமுகம் செய்தார். பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து  முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ள தனுஷ் அவருடைய 50-வது படத்தினை அவரே இயக்கி அதில் அவருடைய அண்ணன் செல்வராகவனை நடிக்க வைத்துள்ளார். இதன் காரணமாக ‘உன்னை நினைத்தால் எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது தம்பி என செல்வராகவன் கூறியிருக்கிறார்.

Selvaraghavan
Selvaraghavan / @Selvaraghavan

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya
TVK Leader Vijay - Edappadi palanisamy