ஆஸ்கர் விருதின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர்.! எந்த பிரிவில் தெரியுமா..?

Default Image

ஆஸ்கர் விருதுகள் இறுதி பட்டியலில் 15 பாடல்களில் ஒன்றாக RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்தார்.

விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும்,  பல சாதனைகளை படைத்தது. உலகம் முழுவதும் 1,800 கோடி வசூல் செய்து இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்ததுள்ளது. வசூலையும் தாண்டி படம் பல விருதுகளையும் குவித்து வருகிறது.

அந்த வகையில்,  95-வது ஆஸ்கர் விருதுகள் இறுதி பட்டியலில் 15 பாடல்களில் ஒன்றாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் (original song )என்ற பிரிவில் இந்த “நாட்டு நாட்டு” பாடல் இடம்பெற்றுள்ளது. மேலும், 95-வது ஆஸ்கர் விருது வழக்கும் விழா அடுத்த (2023) ஆண்டு  மாதம் 12-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

இதைப்போல, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டு மொழிப்படம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 3 பிரிவுகளில் விருதுகளை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்