நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தையும், நேர்கொண்ட பார்வை. வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த நிலையில், இப்படங்களை தொடர்ந்து அஜித் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிப்பார் எனவும், ஒரு கேங்ஸ்டார் படமாக அது இருக்கும் எனவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி இசையமைப்பதாகவும் தகவல்கள் பரவியது.
இதனையடுத்து ஜிவி பிரகாஷ் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கும் போது அஜித் படம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது “சுதா கொங்கராவும் அஜித் சாரும் இணைந்து படம் பண்ணுவாங்க..அதுக்கான நேரம் அமைய வேண்டும்.. அஜித் சாருடைய கால்ஷீட்..சுதா மேம்முடைய கால்ஷீட் சரியாக அமைந்தவுடன் படம் பண்ணுவாங்க… கண்டிப்பாக நானும் அஜித் சாரும் படம் பண்ண வாய்ப்பு இருக்கு” என கூறியுள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …