புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய தளபதி ரசிகர்கள்…!!!
கஜா புயல் வந்து தமிழகத்தில் பல மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. இந்நிலையில் அரசு இவர்களுக்கு பல உதவிகளை செய்து, முகாமமைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தாலும், சிலருக்கும் உணவு, தண்ணீர் கூட கிடைக்காமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தளபதி ரசிகர்கள் இணைந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் தண்ணீர் போன்ற உதவிகளை செய்துள்ளனர். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
source : tamil.cinebar.in