இந்த படத்தில் ராஷ்மிகாவை போடுங்க சார்! சிபாரிசு செய்த சிவகார்த்திகேயன்?
சென்னை : தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ராஷ்மிகா மந்தனாவை சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் “எஸ்கே 23” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு முன்பு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மிருணாள் தாகூரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
ஆனால், தேதி பிரச்சனைக் காரணமாக அந்த படத்தில் மிருணாள் தாகூரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதன் பிறகு தான் ருக்மணி வசந்த் இந்த படத்தில் நடித்தாராம். ஆனால், மிருணாள் தாகூருக்கு முன்னதாகவே, சிவகார்த்திகேயன் இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் கேளுங்கள் என்று கேட்டு இருந்தாராம்.
ஆனால், ராஷ்மிகா மந்தனாவும் அந்த சமயம் தெலுங்கு படத்தில் நடித்து கொண்டு இருந்ததால் அவராலும் “எஸ்கே 23” திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இதனை தொடர்ந்து, அடுத்ததாக சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
இந்த திரைப்படத்திலாவது தனக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தால் நன்றாக இருக்கும் அவருக்கும் தமிழில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. எனவே படத்திற்கு நல்ல வியாபாரமும் ஆகும் என்று சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டுள்ளாராம். எனவே, இந்த படத்தில் தனக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
உண்மையில், சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாரா? என்பதனை பொறுத்து இருந்து பார்ப்போம். சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்த பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.