அப்படி போடுங்க..! ‘டம் டம்’ பாடலுக்கு நடனமாடும் “சித்தார்த்-அதிதி” ஜோடி.! வைரலாகும் வீடியோ.!
நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். இருவரும் காதல் செய்வதை சித்தார்த் கடந்த ஆண்டு அதிதி பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு அறிவித்திருந்தார். அன்றிலிருந்து ஏதேனும் விருது நிகழ்ச்சிக்கு சென்றாலோ, அல்லது சுற்றுலா சென்றாலோ இருவரும் ஒன்றாக தான் சென்று வருகிறார்கள்.
அடிக்கடி இருவரும் வெளியே செல்லும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், சித்தார்த்-அதிதி ராவ் ஜோடி ‘எனிமி ‘ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த டம்..டம் பாடலுக்கு செம நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
View this post on Instagram
அவர்கள் வெளியிட்டுள்ள அந்த நடன வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் நடனம் அருமை..உங்கள் இருவருக்கும் திருமணம் எப்போது..? என கருத்துக்களை ஜாலியாக பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நடிகர் சித்தார்த் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல நடிகை அதிதி ராவ் காந்தி டாக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.