ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 First Single

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் சுகுமார் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா 2 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீதேஜ், திவி வத்யா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, டாலி தனஞ்சய், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கும் முதல் பாகத்திற்கு இசையமைத்து இருந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த புஷ்பா படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பதற்கான அறிவிப்பும் ப்ரோமவுடன் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் வரும் மே 1-ஆம் தேதி காலை 11.7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் பாகத்தில் இருந்து வெளியான பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், இரண்டாவது பாகத்தின் பாடல்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. மேலும், புஷ்பா 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,  ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்