மார்க் ஆண்டனி படத்தில் இணைந்த ‘புஷ்பா’ வில்லன்.!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இணைந்துள்ளார் தெலுங்கு நடிகர் சுனில்.
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜெய்.சூர்யா நடித்து வருகிறார்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் முக்கிய டாப் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் யாரென்றால், புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சுனில் தான். இவர் தான் மார்க் ஆண்டனி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவர் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவர் மார்க் ஆண்டனி படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் கலக்கி வந்த சுனில் தற்போது தமிழ் படங்களில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் உள்ளனர்.
Delighted to welcome #Sunil Gaaru on board for #MarkAntony ???????????????? pic.twitter.com/TZsiEDeAb9
— Vishal (@VishalKOfficial) January 21, 2023