ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

டேவிட் வார்னர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஸ்டைலில் இவர் செய்த ரீல்ஸ்கள் மிகவும் வைரலாகி வரவேற்பைப் பெற்றன.

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான ‘புஷ்பா’ முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக நடந்து வருகிறது.

“புஷ்பா 2” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் போல் தெரிகிறது.

ஆம், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஸ்டைலில் இவர் செய்த ரீல்ஸ்கள் மிகவும் வைரலாகி வரவேற்பைப் பெற்றன.

அதுமட்டுமல்ல ஐபிஎல்-ல் ஹைதராபாத் அணியில் விளையாடி தருணத்தில் இருந்து அவருக்கு தெலுங்கு ரசிகர்கள் இவர்மீது தீராத அன்பு உண்டு. இந்நிலையில், மெல்போர்னில் படப்பிடிப்பு ஒன்றில் டேவிட் வார்னர் பங்கேற்றுள்ளார்.

அநேகமாக, இது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பாக இருக்குமா என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒருவேளை இது உண்மை என்றால், படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்