ஆட்டம் போட வைக்கும் இசை! வெளியானது புஷ்பா 2 இரண்டாவது பாடல்!

Pushpa 2 The Rule The Couple Song song

புஷ்பா 2 : தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடலான ‘சூடானா’ (கப்புள் சாங்)  பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் தான் புஷ்பா. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இரண்டாவது பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஸ்ரீதேஜ், அனசுயா பரத்வாஜ், திவி வத்யா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், படத்தில் இருந்து அப்டேட்டுகள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், ஏற்கனவே படத்தின் முதல் பாடலான புஷ்பா..புஷ்பா பாடல் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று கொண்டு உலகம் முழுவதும் பலரும் ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியீட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில், படத்தின் இரண்டாவது பாடல் ‘சூடானா’ (கப்புள் சாங்) இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதன்படி, தற்போது அந்த பாடல் வெளியாகி இருக்கிறது. பாடலில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடனமாடிய சில காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. அதைப்போல, பாடலில் வரும் இசையையும் ரசிகர்களை ஆட்டம் போடும் வகையில் இருக்கிறது. எனவே, முதல் பாடலை போலவே இந்த இரண்டாவது பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்