இந்திய சினிமாவை அதிர வைத்த ‘புஷ்பா 2’! மிரள வைக்கும் சாதனைகள்!
புஷ்பா 2 திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.829 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை : புயல் கூட ஓய்ந்துவிடும் புஷ்பா 2 வசூல் ஓயாது என்கிற வகையில் தாறுமாறாக படம் வசூலை குவித்து வருகிறது. புஷ்பா முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை போல வரவேற்பு கிடைக்கும் வசூல் ரீதியாகவும் அதைப்போல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்த்தால் புஷ்பா 1 மொத்த வசூலை வெளியான 3 நாட்களில் புஷ்பா 2 முறியடித்துவிட்டது.
தற்போதைய வசூல் விவரம்
படம் எத்தனை கோடிகள் வசூல் செய்கிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துக்கொண்டு வருகிறது. அதன்படி, முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ,291 கோடி வசூல் செய்திருந்ததாகவும், இரண்டாவது நாளில் ரூ.449 கோடி வசூல் செய்தது எனவும், 3 நாட்களில் ரூ.621 கோடி வசூல் செய்திருந்ததாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது படம் வெளியான 4 நாட்களில் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படம் வெளியான 4 நாளில் ரூ.289 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிரள வைக்கும் சாதனைகள்
முதல் நாளில் அதிகம் வசூல் : புஷ்பா 2 படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.291 கோடி வசூல் செய்து இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் (ஆர்ஆர் படம் ரூ.250) கோடிகள் வரை வசூல் செய்து முதல் இடத்தில் இருந்தது.
விடுமுறையில் இறங்காமல் வசூல் : விடுமுறை தினங்களில் இந்த படம் வெளியாகவில்லை என்றாலும் வசூலில் அமோக வரவேற்பு கிடைத்துள்ள காரணத்தால் வேலை நாட்களில் வெளியாகி அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
பண்டிகை இல்லை : படம் எதாவது பண்டிகை தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பண்டிகை தினத்திலும் வெளியாகவில்லை. அப்படி இருந்து படம் வெளியான நாள் தான் பண்டிகை என படத்தை கொண்டாடி வருகிறார்கள். இதன் மூலம், பண்டிகை இல்லாமல் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையும் படைத்திருக்கிறது.
ஹிந்தியில் மிரட்டல் : படத்திற்கு வெளியான எல்லா மொழிகளில் இருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ஹிந்தியில் மட்டும் இன்னும் கூடுதலாக வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக ஹிந்தியில் வெளியான படங்களில் 1 நாளில் அதிகம் வசூல் செய்த சாதனையும் படைத்துள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி ஹிந்தியில் மட்டும் படம் 86 கோடி வசூல் செய்தது.
அதிவேக ரூ.250,ரூ.300 : புஷ்பா 2 இந்திய அளவில் ரூ.250 கோடி வசூலைத் தாண்டிய படம் என்ற சாதனையும், டிசம்பர் 8-ஆம் தேதி படைத்தது. டிசம்பர் 9 -ஆம் தேதி இந்தியாவில் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையு படைத்தது. இன்னும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதால் என்னென்ன சாதனைகள் எல்லாம் படைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.