எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Published by
பால முருகன்

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2. இந்த திரைப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். இந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீதேஜ், திவி வத்யா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கான முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட்டானது. குறிப்பாக படம் உலகம் முழுவது 375 கோடி வரை வசூல் செய்து இருந்தது. முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றுள்ள காரணத்தால் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இரண்டாவது பாகம் மட்டும் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட இந்த படத்தில் இருந்து வெளியான டீசர் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதற்கிடையில், படம் திரையரங்கில் வெளியான பிறகு ஓடிடியில் வெளியாவதற்கான உரிமையை எந்த நிறுவனம் எவ்வளவு கோடி வாங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி  உரிமையை பிரபல ஓடிடி  நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட எல்லா மொழிகளையும் சேர்த்து 275 கோடிகளுக்கு வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே இத்தனை கோடிக்கு ஓடிடியில் விற்பனையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

4 minutes ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

54 minutes ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

2 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

2 hours ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

3 hours ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

3 hours ago