இரும்பு மனிதனாக அவதாரம் எடுத்த பிரபாஸ்! அப்போ கமல் அவதாரம் என்னவாக இருக்கும்?

Prabhas from ProjectK

பிரபாஸ் நடிக்கும் ‘Project-K’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள டோலிவுட் திரைப்படமான “ப்ராஜெக்ட்-கே” படத்தில் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார் மற்றும் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ளார் படத்தை 2024 ஜனவரி 12 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

ProjectK
ProjectK [Image Source :@VyjayanthiFilms]

சமீபத்தில், இந்த திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தில், கமல் வில்லனாக நடிக்கிறார். தற்போது, படத்தின் கதாநாயகனாக நடிக்கும் பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த பர்ஸ்ட் லுக் மிகவும் எதிர்பாராதது வகையில், போஸ்டரில் நீண்ட முடி மற்றும் முழு தாடியுடன் நடிகர் பிரபாஸ், ஒரு அதிநவீன உலோக உடையை அணிந்து சண்டைக்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. அந்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு ஜூலை 21ம் தேதி படத்தின் க்ளிம்பஸ் வீடியோ ஒன்று வெளியாகவுள்ளது என்று அறிவித்துள்ளது.

kamal haasan vikram
kamal haasan vikram [Image Source : File Image]

பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்க்கையில், டிஸ்டோபியன் ஹாலிவுட் தீம் பின்னணியில் இந்த திரைப்படம் அமைக்கப்ட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதால் அவருடைய கதாபாத்திரத்தின் கெட்டப் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அந்த வகையில், ப்ராஜெக்ட்-கே படத்தில் நடிப்பதற்காக தனது கெட்டப்பை செஞ் செய்ய இப்பொது அமெரிக்காவில் இருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். ஒரு வேளை அவரும் இது போன்ற இரும்பு மனிதர் போல் காட்சியளிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்