டிக்கெட் கட்டணங்களை குறைக்க தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!
சிறு பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைக்க தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 2023 முதல், திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து வருவது குறித்து தங்களின் குரல் பதிவை கேட்டோம். இந்த விஷயம் தயாரிப்பாளர்களையும் மிகவும் பாதித்து வருகிறது.
சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் இருவரின் பொறுப்பாகும். இதை மனதில் வைத்து நாம் இரு சங்கங்களும் சேர்ந்து சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியமாக உள்ளது.
சென்னையில் ரீ-ரிலீஸ் என்ற முறையில் சில முக்கிய படங்களை திரையரங்கில், குறைந்த டிக்கெட் கட்டணத்தில் வெளியிட்டு கமலா திரையரங்கம் நல்ல சாதனைகளை புரிந்துள்ளது. குறைந்த டிக்கெட் கட்டணங்கள் பார்வையாளர்களை கவருகின்றன என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
‘எங்களை மன்னித்து விடுங்கள்’! மணிகண்டனின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடர்கள்!
இந்நிலையில், சிறு பட்ஜெட் படங்களைத் திரையரங்கிற்கு வந்து மக்கள் பார்ப்பதை இலகுவாக்கும் வகையில், அப்படங்களுக்கு சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கவும். பிற நகரங்களில் அதிகபட்சம் ரூ.80 நிர்ணயிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறு பட்ஜெட் படங்களுக்கு குறைந்த டிக்கெட் கட்டணங்களை வசூலிக்க தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கங்களுக்கு நமது சங்கத்தின் கோரிக்கை.#TFAPA @offBharathiraja @TGThyagarajan @TSivaAmma @Dhananjayang @prabhu_sr #SSLalitKumar @sureshkamatchi ???? pic.twitter.com/KaWphig7Tl
— Tamil Film Active Producers Association (@tfapatn) February 13, 2024