“FDFS ரிவ்யூக்களை தடை செய்க” – தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் மீதான கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை : திரைப்பட விமர்சனங்கள் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்கும் ஊடகங்களை கண்டிப்பதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
நடப்பாண்டில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா படங்கள், பொதுமக்கள் விமர்சனங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என தயாரிப்பாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இதில், நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் மீதான கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது.
ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் சுக்க ஒரு கருவியாக. திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
நடப்பு 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு முதல்நாளில் திரையரங்கில் எடுக்கப்படும் ரிவ்வியூகளின் மூலம் பெருமளவில் பாதிப்பை யூட்யூப் சேனல்கள் ஏற்படுத்தியுள்ளன.
திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும், எந்த YouTube Channel-களும் பார்வையாளர்கள், ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்க கூடாது.
2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review, Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியுள்ளன.
இதனால், அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review, Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.
திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைத்தல் – #TFAPA வன்மையாக கண்டிக்கிறது ✍️@offBharathiraja @TGThyagarajan @TSivaAmma @Dhananjayang @prabhu_sr #SSLalitKumar @sureshkamatchi pic.twitter.com/bQ1FMZZdMx
— Tamil Film Active Producers Association (@tfapatn) November 20, 2024