தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதி !புதிய திரைப்படங்களுக்கு சிக்கல் …..
தயாரிப்பாளர்கள் சங்கம் , இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதிய தமிழ்த்திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
டிஜிட்டல் வடிவிலான திரைப்பட ஒளிபரப்புக்கான கட்டணத்தை குறைக்கக் கோரி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தனர். இந்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திட்டமிட்டபடியே இன்று முதல் எந்தப் படமும் வெளிவராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையில் அரசு தலையிட வேண்டும் என்றும் இனி டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்ஸ்(digital service providers) அமைப்பினருடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை என்றும், திரையரங்கு உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சு நடைபெறும் எனவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவுக்கு எதிராக எந்த ஒரு தயாரிப்பாளர் நடந்துக் கொண்டாலும் சங்கத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் இந்த முடிவால் இன்று முதல் தமிழ்ப்படங்கள் வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.இதனால் ஏராளமான சிறிய படங்கள் மற்றும் திரையரங்குகளின் வருவாய் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.