அதிர்ச்சி செய்தி.! அன்பே சிவம், புதுப்பேட்டை என தரமான தமிழ்ப்படங்களை தயாரித்த முரளிதரன் காலமானார்.!
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ முரளிதரன் காலமானார்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் பொருளாளரும் மற்றும் தலைவருமான கே.முரளிதரன் இன்று மதியம் 1.30 மணியளவில் கும்பகோணம் கோயில் ஒன்றில் இருந்து வெளியே வரும்போது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருக்கு வயது 66.
அவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அவரது இறுதிச்சடங்கு நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மறைந்த தயாரிப்பாளர் கே.முரளிதரனுக்கு மனைவி, இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர் அன்பே சிவம், பகவதி, தாஸ், புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். அதைப்போல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த படங்களை அவர் வெளியிட்டும் உள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையின் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.