நடிகை ஊர்வசி சாரதா பழம்பெரும் நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் துலாபாரம், ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் வி.வி.ஆண்டனி, 1979-ம் ஆண்டு புஷ்யராகம் என்ற பெயரில் மலையாளப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி அவர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் நடித்த நடிகை ஊர்வசி சாரதாவுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்காமல், குறிப்பிட்ட தொகையை மட்டுமே கொடுத்துள்ளார்.
அதன் பின் வி.வி.ஆண்டனி எடுத்த படங்கள் பெரிய அளவில்வெற்றியை பெறாத நிலையில், சாரதாவுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை அவரால் கொடுக்க முடியாமலே போய்விட்டது. 40 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், வி.வி.ஆண்டனி தனது பிள்ளைகளின் பொருளாத நிலை உயர்ந்ததையடுத்து, சாராதாவுக்கு சம்பளபாக்கியை கொடுத்துவிட விரும்பியுள்ளார்.
இந்நிலையில், நடிகை ஊர்வசி சாரதா, சினிமா விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கொச்சி டவுன் ஹாலுக்கு வருவதாக தயாரிப்பாளர் ஆண்டனிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விட கூடுதலாக ஒரு தொகையை எடுத்துக்கொண்டு அந்த விழாவுக்கு சென்றுள்ளார்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…