இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம்.
ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார் எனவும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். பின், ஞானவேல் சொல்வதில் ஒன்றில் கூட உண்மை இல்லை என இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருந்தார்.
அதன் பிறகு, இந்த விவகாரம் குறித்து பருத்தி வீரன்’ படத்தில் தொடர்புடைய நடிகர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பலர் அமீருக்கு ஆதரவாகவும், ஞானவேல்ராஜாவை கடுமையாக சாடியுள்ளனர். அந்த வகையில், இப்போது ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குமென தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வேதனையில் இருக்கிறாராம்.
ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சினேகன்!
இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில், சூர்யாவுடன் இயக்குநர் அமீரும் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், பருத்திவீரன் படம் மற்றும் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதனால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் ‘வாடிவாசல்’ மேலும் தாமதமாக கூடும் என்பதால் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதற்கான சின்ன வீடியோ ஒன்றும் வெளியானது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…