ரொம்ப திமிரு! விஜயகாந்த் அண்ணனுக்கு துரோகம் பண்ணிட்டேன்…பிரபல தயாரிப்பாளர் கண்ணீர்!!
Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பற்றி பல பிரபலங்கள் புகழ்ந்து பேசுவது உண்டு. அந்த வகையில், விஜயகாந்தை வைத்து பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுப்பையா ‘விஜயகாந்த் அண்ணனுக்கு துரோகம் பண்ணிட்டேன்’ என கண்கலங்கி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விஜயகாந்த் அண்ணனுக்கு நான் ரொம்பவே நெருங்கியவன். எப்படி என்றால் விஜயகாந்த் தனிப்பட்ட விஷயங்களை என்னிடம் கூறியிருக்கிறார்.
read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!
குறிப்பாக ஒரு முறை சிகரெட் பிடித்து கொண்டு என்னிடம் கல்யாணம் பண்ணனும் குழந்தை வேணும் எப்படி நடக்கப்போகிறது என்று கேட்டார். நான் அதற்கு உனக்கு என்ன வயது இல்லையா இவ்வளவு வயதில் யாரும் திருமணம் செய்துகொள்ளவில்லையா? பிறகு எதற்கு சோகம் கவலையை விடு என்று கூறினேன். அதன்பிறகு அவருக்கு திருமணம் முடிந்து பெரிய நடிகராக வளர்ந்துவிட்டார்.
read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?
நான் அவருடன் ஆரம்ப காலத்தில் இருக்கும்போதே என்னிடம் அவர் சொல்லும் விஷயம் நான் பட வாய்ப்பு உனக்கு தருகிறேன். ஆனால், நீ என்னை விட்டு போகாதே என்று கூறுவார். ஆனால், நான் அவருடன் இல்லாமல் கொஞ்சம் திமிரு பிடிச்சி அவரிடம் பேசாமல் இருந்துவிட்டேன். என்னை பொறுத்தவரை நான் அவருக்கு துரோகம் செய்துவிட்டேன். பலமுறை நான் அவர்கூட இல்லை என்று அவர் பலரிடம் வருத்தப்பட்டு இருக்கிறார்.
read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?
நான் அவருடனே இருந்திருந்தேன் என்றால் அவரை கண்டிப்பாக விட்டு இருக்கமாட்டேன்” எனவும் கண்ணீருடன் சுப்பையா விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார். சுப்பையா விஜயகாந்தை வைத்து கேப்டன் பிரபாகரன், காளையும் நீயே மாலையும் நீயே உள்ளிட்ட படங்களை தயாரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.