தலயின் வலிமை படத்தினை குறித்த புதிய செய்தியை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் பிரபல தெலுங்கு நடிகரின் ரீ என்ட்ரி குறித்தும் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின.மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். எனவே ரசிகர்கள் பலர் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படம் ஏப்ரல் மாதத்தில் முதலில் வெளியிடப்படுவதாக இருந்தது, ஆனால் கொரோனா தொற்று காரணமாக தீபாவளிக்கு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் வலிமை பட பணிகளை கொரோனா பிரச்சினை அனைத்தும் முடிவுக்கு வந்த பின்னர் தொடங்கலாம் என்று அஜித் கூறியதாக அண்மையில் தெரிய வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,அஜித்தின் 60வது படமான வலிமை படம் ஒரு மிகப் பெரிய ஆக்ஷன் படம் என்றும், இதன் 50 சதவீதம் படப்பிடிப்புகள் முடிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை போன்று தெலுங்கிலும் வக்கீல் சாப் என்ற பெயரில் வெளியாகயிருக்கிறது. இன்னும் 10-15 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள இந்த படத்தின் மூலம் இரண்டு வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் பவன் கல்யாண்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…